Categories
உலக செய்திகள்

சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள்… கொன்று குவித்த பயங்கரவாதிகள்..!!

சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டு மீண்டும் இதுபோன்று சேவையில் ஈடுபட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர்.

நைஜீரியாவில் கொரோனா  பரவலுக்கு பாதுகாப்பாக சமூக சேவையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவன பணியாளர்கள் ஐந்து பேரை அந்த நாட்டில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதுபற்றி வெளியாகியுள்ள தகவலில், ” நைஜீரியாவில் இயங்கிவரும் 3 சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் 5 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த மாதம் கடத்திச் சென்றனர். அதன்பின் அவர்கள் 5 பேரையும் படுகொலை செய்து அதன் வீடியோ காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

நைஜீரியாவில்  செயல்படும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்களையும் ராணுவத்துக்கு உதவி செய்பவர்களையும் தொடர்ந்து குறிவைத்து கொல்லப் போவதாக அந்த வீடியோ பதிவில் பயங்கரவாதிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அதிபர் முகமது புகாரி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்று தரப்படும்” என்று உறுதியாக கூறியுள்ளார்.

Categories

Tech |