Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… எலக்ட்ரீசியனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.. இதில் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது..  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தங்கராஜ் (வயது 50), தன்னுடைய மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார்.

இந்தநிலையில் தான் இவர் வீட்டின் அருகே வசிக்கும் 9 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகசொல்லப்படுகிறது.. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆண்டிப்பட்டி போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்த தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Categories

Tech |