கொரோனா விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று சொன்னாலும், திமுகவின் உடைய கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக பங்கேற்பார்கள். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்கின்றன. எனவே இது திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட்டமாகவே பார்க்க முடியும்.
கடந்த இரண்டு முறை இதே போல நடந்த கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஒரு ரேஷன் அட்டைக்கு மத்திய அரசு 7500 வழங்க வேண்டும், மாநில அரசு 7500 வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் மூன்றாவது முறை இந்த கூட்டம் நடைபெறுகின்றது
கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுகின்றது என்று திமுக சார்பில் தெரிவித்து இருக்கின்றார்கள். வரக்கூடிய திங்கட்கிழமை காணொலிக் காட்சி மூலமாக இந்த கூட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.