ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. சச்சின் பைலட் மற்றும் அவரது 18ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற ஒரு உத்தரவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தற்போது பிறப்பித்திருக்கிறது.
இந்த வழக்கில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என் சச்சின் பைலட் தரப்பு கோரிக்கையும் ஏற்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கு விசாரணை இன்னும் தொடர்ச்சியாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தான் தெரிகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் மற்றும் விளக்கங்களை கேட்டு இந்த வழக்கு ஒரு நீண்ட வழக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.