திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல் தமிழக அரசு மிகவும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்புப் பணிகளை முன்னெடுத்தது. இதற்கு சிறந்த உதாரணமாக இருந்ததுதான் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைவு. தமிழகத்தில் இறப்பு வீதம் குறைவு என்று பலராலும் தமிழக அரசு பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாட்டிலேயே அதிகமான சோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கியது. இருந்தும் எதிர்கட்சியான திமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது.
கொரோனா காலத்திலும் அதிமுக முறைகேடு செய்துள்ளது, மோசடி செய்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளை மறைக்கின்றது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் திமுக வைத்துவந்ததை தடுப்புபணியின் மூலம்…. திமுக விமர்சனங்களை அடித்து சுக்குநூறாக்கி துவம்சம் செய்தது அரசு.
கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் இருந்த அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் மறைக்கப்பட்ட இழப்புகள் என்று 444 மரணங்கள் சேர்க்கப்பட்டது. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததோ இல்லையோ…. திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் லாபத்தை தேடிக் கொடுத்தது.
இதனை வசமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மு.க ஸ்டாலின் திமுக கூட்டணி சார்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திட்டமிட்டுள்ளார். கொரோனா காலத்தில் 2 முறை திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் வருகின்ற திங்கட்கிழமை ஹாட்ரிக் ( மூன்றாவது முறையாக ) கூட்டணி காட்சிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில், அரசினுடைய கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்னும் 9 அல்ல 10 மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் அதுகுறித்து ஆலோசிப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது. அதே போல விடுபட்ட மரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இருப்பதால் அதிமுக அரசுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.