ஈரானில் விமானத்திற்கு அருகில் வந்த அமெரிக்க போர் விமானம் பயணிகளை அச்சுறுத்தியுள்ளது.
டெஹ்ரானிலிருந்து பெய்ரூட்டுக்கு பரந்த ஈரான் பயணிகளின் விமானத்திற்கு அருகில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வேகமாக பறந்து வந்து பயணிகளை அச்சுறுத்தல் உள்ளது. இருந்தாலும் விமானம் பாதுகாப்பாக லெபனான் தலைநகர் பகுதியில் தரை இறங்கியது. அமெரிக்க அதிகாரி அசோசியேட்டட் பிரஸ் இத்தகைய தகவலை உறுதி செய்துள்ளார். அவர் ஈரான் விமானத்திற்கு சிறிது தொலைவில் பாதுகாப்பான தூரத்தில் தான் அமெரிக்க போர் விமானம் பறந்துள்ளது எனக் கூறினார்.
இதுகுறித்து லெபனான் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மகன் ஏர் பிளைட் 1152 என்ற விமானம் பெய்ரூட்டில் பாதுகாப்பான முறையில் தரை இறங்கியதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலில் ஈரான் இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளது. தென்மேற்கு சிரியா வானில் அல் டான்ஃப் என்ற பகுதியில் அடையாளம் காணாத இரண்டு அமெரிக்க ஜெட்கள் ஈரான் பயணியர்களின் விமானத்தினை அச்சுறுத்துவதாக சிரியா அரசு கூறியுள்ளது. இதனை தொடந்தது ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.