Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 30 தான்…! எக்கச்சக்கம் இல்லையா ? EPSயை சீண்டிய உதய் …!!

கொரோனா  பேரிடரால் ஒட்டுமொத்த நாடுகளில் பொருளாதாரம் முற்றிலும் சிதைத்துள்ளது. இதில் இந்தியாவும் தப்பவில்லை,  தமிழகமும் தப்பவில்லை. கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்தால் சிதைந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கவர்ந்து வந்த ஒப்பந்தங்களை அனுமதி அளித்து வருகின்றது. இதையடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த SwirePay நிறுவனம், ரூ.23 கோடியில் தனது Digital Payments திட்டத்தினை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வாயிலாக சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் ட்விட் செய்திருந்தார்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்து விமர்சித்துள்ளார். அதில், எஜமானர் பாணியில் உலகம் சுற்றிவந்த எடப்பாடி, அந்த கம்பெனி வருது இந்த ஒப்பந்தம் வருது எக்கச்சக்க வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று புளுகிவிட்டு, 20-30 பேருக்கு வேலை கிடைப்பதையெல்லாம் பெருமையென பேசுகிறார். உடன் பயணித்த குழுவினரின் அளவுக்காவது வேலைவாய்ப்பை ஈர்த்திருக்கலாம் என்று ட்விட் செய்துள்ளார்.

 

Categories

Tech |