Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை…. ! இறுதி சடங்கை மகன்கள் செய்யக்கூடாது…! தற்கொலை செய்த தம்பதிகள் உருக்கம்…!!

தங்கள் மகன்கள் எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று தம்பதிகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெரம்பூர் செம்பியம் என்ற பகுதியில் குணசேகரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆன நிலையில் அவர்கள் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்துள்ளனர். மூன்றாவது மகனான ஸ்ரீதர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். குணசேகரன் தச்சு வேலை செய்து வந்த நிலையில் அதில் வேலை சரியாக கிடைக்காத காரணத்தால் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளி வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மகன் ஸ்ரீதர் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் குணசேகரனுக்கும் வேலை இல்லாத காரணத்தால் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களின் முதல் இரண்டு மகன்களிடம் வீட்டு வாடகை கொடுப்பதற்கும் குடும்பச் செலவிற்கு சிறிது பண உதவி கேட்டுள்ளனர். அவர்கள் இருவருமே அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் மனமுடைந்த தம்பதியினர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருக்கின்ற மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனை அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வீட்டில் சோதனை நடத்தியபோது குணசேகரன் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அக்கடிதத்தில் “எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச் சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரை இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என்று எழுதி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு மகன்கள் மிகவும் கதறி அழுந்த காரணத்தால் காவல்துறையினர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு வயதான தம்பதியும் உடலுக்கு காவல்துறையினர் மனம் உருக மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |