ஆற்றின் நடுவே செல்ஃபி எடுத்த இளம்பெண்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மலைப்பகுதியில் இருக்கின்ற ஆற்றின் நடுவில் பாறையில் அமர்ந்து இளம்பெண்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதை அறியாமல் செல்பி எடுப்பதில் கவனம் செலுத்தி கொண்டிருந்த இளம்பெண்கள் மிரளும் வகையில் திடீரென ஆற்றில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் காப்பாற்றச்சொல்லி கூச்சலிட்டிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கயிறு கட்டிக் கொண்டு அவர்களை காப்பாற்றினர்.
இச்சம்பவம் பற்றி காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “செல்ஃபி எடுப்பது என்பது தவறல்ல, ஆனால் அதேசமயம் இத்தகைய ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுப்பதனை தவிர்க்க வேண்டும். மழை நேரம் என்பதால் வெள்ளம் வந்துள்ளது எனவும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் அந்த இரு பெண்களும் காப்பாற்றப்பட்டனர் எனவும் கூறினர். பின்னர் துரித நடவடிக்கையால் இவர்கள் உயிர் பிழைத்தார்கள்” என்றும் இளம்பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.