Categories
உலக செய்திகள்

முக கவசம் போட சொன்னவருக்கு துப்பாக்கி மிரட்டல்…. வரவேற்று ஜெயிலில் அடைத்த போலீஸ் …!!

அமெரிக்காவில் முகக்கவசம் அணிய சொன்ன நபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் கடையில் கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணியுமாறு கூறிய சக கடைக்காரரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 28 வயதான  வின்சென்ட் ஸ்காவெட்டா என்ற நபரை கைது செய்தனர். இவரின் செயலுக்கு, பாம் பீச் ஷரிப் அலுவலகம் “பிபிசி சிறைக்கு வருக மகனே, இது ஒரு பாடமாக இருக்கட்டும். இது மோசமாக முடிவடைந்து இருக்கலாம் என்று  டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |