மனித எலும்புக்கூடுகள் உடன் அமானுஷ்யங்கள் உடைய வடகொரிய கப்பல்கள் கடற்கரை ஒதுங்குவதற்கு சீனா காரணம் என ஜப்பான் கூறியுள்ளது.
ஜப்பான் சாடோ தீவில் சென்ற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரத்தில் செய்யப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. அந்தப் படகில் இருந்த துண்டிக்கப்பட்ட இருவரின் தலைகளும் மற்றும் எலும்பு கூடாக இருக்கின்ற ஐந்து நபர்களின் சடலங்களும் ஜப்பான் கடலோர காவல் படையினரால் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்ற இரண்டு ஆண்டுகளாக 50 வடகொரிய ர்களின் சடலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். சீனா, வட கொரிய கடலில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிக்க ஆயுதங்கள் அடங்கிய கப்பல்களை அனுப்பி வைக்கிறது. அதனால் வடகொரிய மீனவர்கள் தங்களின் படகுகளில் சென்று கொண்டிருக்கும் போது தங்கள் உயிரை தியாகம் செய்கின்றனர்.
இதேபோல் கடலின் சீற்றம் அதிகமாகும் போது அதனை தாங்கமுடியாமல் வடகொரிய மீனவர்கள் பலர் கரை திரும்பாமல் போனதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஒரு பக்கம் சீனா உடைய ஆதிக்கத்தினை சிறிதும் கருத்தில் கொள்ளாத கிம் அரசு, மற்றொரு பக்கம் உணவு தட்டுப்பாட்டினை சமாளிப்பதற்கு மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக ஜப்பான் கூறியிருக்கின்றது. இத்தகைய நிலையில் சென்ற ஏழு ஆண்டுகளில் மட்டும் கடல் அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்து எதிர்பாராதவிதமாக உயிர் பிழைத்த 50 வடகொரிய மீனவர்களை ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.