Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புல்லட் மட்டுமே குறி… ஆசை தீர ஓட்டி வந்த திருடர்கள்… சோதனையில் சிக்கிய சோகம்..!!

ஆசைக்காக புல்லட் திருடி ஓட்டி வந்த நபர்கள் ஓராண்டுக்குப்பின் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

சென்னை சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது புல்லட் வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார்  தடுத்து நிறுத்தினர்.. பின் நடத்திய விசாரணையில், உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை.. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்..

இந்த விசாரணையில் இருவரும் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நூருல்லா (24) மற்றும் சையத் ரியாஸ் (40) என்பதும் தெரியவந்தது.. இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு மேற்கு தாம்பரத்தில் விலை உயர்ந்த புல்லட்டையும், அதுமட்டுமில்லாமல் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தாம்பரம் காசநோய் மருத்துவமனை அருகே இன்னொரு புல்லட் வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்..

மேலும் இருவரும் தொடர்ந்து புல்லட்பைக்குகளை மட்டுமே திருடி ஆசை அடங்கும் வரை ஓட்டி விட்டு, அதன்பின் குறைந்த விலைக்கு விற்று விடுவார்களாம்.. இது விசாரணையில் தெரிய வந்துள்ளது.. பின்னர் அவர்களிடமிருந்த 2 புல்லட்களையும் பறிமுதல் செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்..

Categories

Tech |