டெல்லியில் இன்று காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு மாநில தேர்தல் அலுவலர்கள் கருத்தை கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்றும், இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.