Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலுக்கு திருமணமா ? ட்விட் பதிவால் எழும் கேள்விகள் ..!!

கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் சோனியா அகர்வால் தமிழ் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் விஜய்யின் மதுர, சிம்புவின் கோவில், வானம், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, திருட்டுபயலே, சதுரங்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய படங்களிலும் நடத்தியிருக்கிறார்.

செல்வராகவனை 2006 இல் காதல் திருமணம் செய்த பின்னர் 2010இல் அவர்களின் இடையே கருத்து வேறுபாட்டால் விவகாரத்து ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடமிட்டு நடிக்க ஆரமித்த சோனியா அகர்வால் சென்ற ஆண்டு திரைக்கு வந்த விஷாலின் அயோக்கியா, தடம், தனிமை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சோனியா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படத்தையும் இன்னும் இரண்டு நாட்கள் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்கள். சோனியா அகர்வாலின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் திருமண புகைப்படம் திரைப்படத்தின் விளம்பர படமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |