Categories
உலக செய்திகள்

அடடே..! இப்படி ஒரு நட்பா… 20 வருடம் கழித்து… கோடிஸ்வரராகிய நண்பர்கள் ….!!

அமெரிக்காவில் 28 வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்கு கொடுத்த வாக்கினை தற்போது நிறைவேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற நகரை சேர்ந்த டாம் குக் மற்றும் ஜோசப் பீனி என்ற இரு நண்பர்களும் 1992 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அது என்னவென்றால், தங்கள் யார் பவர் பார் ஜாக்பாட்டை வென்றாலும் அதனை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தமாகும். இதனைத் தொடர்ந்து 28 வருடங்களுக்குப் பிறகு சென்ற மாதம் டாம் குக் பவர்பால் ஜாக்பாட் டிக்கெட்-டினை வாங்கி இருக்கின்றார். அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் அவருக்கு ரூ.164 கோடி மதிப்பில் லாட்டரி விழுந்துள்ளது.

இதனையறிந்த அவர் தன் நண்பர் ஜோசப் பீனிக்கு இச்செய்தியை கூறியுள்ளார். தற்பொழுது பணியிலிருந்து ஓய்வு பெற்று, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஜோசப் பீனிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் டாம் குக் “1992 ஆம் ஆண்டில் செய்துகொண்ட ஒப்பந்தம் முறையில் அத்தகைய பணத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்” என்று கூறியிருக்கின்றார். இதனைப் பற்றி டாம் குக் கூறும்போது, “இந்த பணத்தின் மூலம் எத்தகைய திட்டமும் இல்லை, மகிழ்ச்சியாக ஊர் சுற்றுவதும் பணியின் ஓய்விற்கு பின்னர் மீதம் இருக்கின்ற வாழ்க்கையினை நிம்மதியாக வாழலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |