தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 21,38,704 ஆக இருக்கின்றது.
அதேபோல இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 53,132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டமும் தப்பவில்லை.. கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவானது, மட்டுமில்லாமல் இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவாக 6500ஐ கடந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை – 1299
விருதுநகர் – 424
செங்கல்பட்டு – 419
திருவள்ளூர் – 378
காஞ்சிபுரம் – 349
மதுரை – 326
தூத்துக்குடி – 313
குமரி -266
தேனி -234
ராணிப்பேட்டை – 222
திருச்சி – 217
கோவை – 189
தஞ்சை-186
க.குறிச்சி-179
வேலூர் -174
நெல்லை-171
விழுப்புரம் -164
தி.மலை – 134
சேலம்-122
திருவாரூர்-96
புதுக்கோட்டை-95
கடலூர்-91
தென்காசி-93
சிவகங்கை-82
கிருஷ்ணகிரி-82
திண்டுக்கல்-80
ராமநாதபுரம்-72
திருப்பத்தூர்-56
நாகை-46
அரியலூர்-37
தர்மபுரி – 36
நீலகிரி -34
ஈரோடு -25
நாமக்கல் -28
திருப்பூர்-18
பெரம்பலூர் – 16
கரூர்-5