தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,43,297 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 21,38,704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது.
நேற்று போலவே இன்றும் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி 3,320 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 56 பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 71.74 % குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இதனால் சென்னையில் 13,743 பேரும், தமிழகம் முழுவதும் 53,132 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 26 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு :
சென்னை -22
மதுரை -10
விருதுநகர் – 6
திருவள்ளூர் -5
குமரி -5
கோவை – 4
நெல்லை – 4
காஞ்சிபுரம் – 4
செங்கல்பட்டு -4
திண்டுக்கல் -3
ராணிப்பேட்டை -3
தென்காசி -2
தி.மலை – 2
தேனி -2
வேலூர்- 1
திருச்சி -1
கிருஷ்ணகிரி-1
நாமக்கல்-1
நாகை -1
சேலம் -1
தூத்துக்குடி -1
திருப்பத்தூர் -1
சிவகங்கை -1
புதுக்கோட்டை -1
திருப்பூர்-1
அரியலூர் -1