Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் – நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல் அமைச்சர் நாராயணசாமி மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக  திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்து இருப்பேன். புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது அதை எதிர்த்து போராடி வருகிறேன் மத்தியில் புதுச்சேரி அரசு விருதுகளை பெற்றுள்ளது என்று நாராயணசாமி பேரவையில் பேசினார்.

Categories

Tech |