Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர தடை, கடைகள் அனைத்தும் அடைக்கப்படடும், பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |