Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…மரியாதை அதிகரிக்கும்…மதிப்பு கூடும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று மற்றவர் பிரச்சனையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். வீடு வாகனம் வாங்குவது நல்லது. படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்தியை கொடுக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். ஆலையம் சென்று அம்மனை வழிபடுவது ரொம்ப சிறப்பு.

 

அதுபோலவே இன்று எதையும் நீங்கள் திருப்திகரமாகவே செய்து முடிப்பீர்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவி புரிவீர்கள். தானம் என்று வந்துவிட்டால் அனைவருக்கும் நீங்கள் தானம் கொடுப்பதில் வல்லவராக இருப்பீர்கள். உங்களுக்கு சிறப்பான நாளாக இருந்தாலும் சில விஷயங்களில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதம் என்பதை கண்டிப்பாக வேண்டாம். வீண் பிரச்சனைகளில் கண்டிப்பாக தலையிடவேண்டாம். காதலர்கள் பேச்சில் எப்போதும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

 

எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். இதனை எப்போதுமே நீங்கள் வாரம் வாரம் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

 அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |