சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக 2 வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். சென்னை அணியில் பிராவோ ‘டெத் ஓவர்’ வீசுவதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, பிராவோவுக்கு ஹாம்ஸ்டிரிங் (Hamstring) காயம் ஏற்பட்டது. இதனால் இன்று நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ பங்கேற்பாரா? என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அவருக்கு முதல் நிலை ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் 2 வாரங்கள் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அணியில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கஜ்ஜலின் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி இன்றைக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும், 9-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் , 11-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 14-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடசர்ஸ் அணியையும், 17-ந்தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் எதிர்கொள்கிறது.