கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காரணத்தினால் கோவையில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவையைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் வரை கிட்டத்தட்ட 2966பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது. கோவையிலும் அதே நடைமுறைதான் கடந்த ஒரு மாதமாக பின்பற்றி வரப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் சனிக்கிழமை பல்வேறு இடங்களில்…. முக்கியமாக இறைச்சி கடைகளில் அதிகமான கூட்டங்கள் காணப்பட்டன. இந்த முறை கூட்டத்தை குறைப்பதற்காக இன்று சனிக்கிழமை மாலை 6 மணி 27ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழுமுடக்கம் அமலில் இருக்கும் இன்று மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.