நாடுமுழுவதும் பீடி, சிகரெட், புகையிலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பல தீங்குகள் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மது பிரியர்களும், புகை பிரியர்களும் இந்த பழக்கத்துக்கு அடிமையயாகி விடுகின்றனர். சமீப காலமாக இளைய சமுதாயத்தினரும் பீடி, சிகரெட், புகைக்கு அடிமையாக இருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து மத்திய அரசாங்கம் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி… பீடி, சிகரெட் புகையிலை பயன்படுத்துவோருக்கு குறைக்கவும் பல்வேறு வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதையடுத்து பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை வாசகங்கள் அச்சடித்து வெளியிடுவது வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.