Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தன்னம்பிக்கை துளிர்விடும்…மனமகிழ்ச்சி உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாக இந்நாள் இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவில் திருப்தி இருக்கும். செயல்களை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியமும் ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை நீங்கி வேகம் பிடிக்கும். சுறுசுறுப்பாக நீங்களும் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

புதிய முயற்சிகள்  வெற்றிகரமாக இருக்கும். ஆனால் மாலை நேரங்களில் மட்டும் கொஞ்சம் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இல்லையேல் மனதை கொஞ்சம் அமைதிப்படுத்தும் தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள் சிறப்பாக இருக்கும். வசீகரமான பேச்சால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். ஏற்கனவே காதலில் உள்ளவர்கள் இன்றைய நாள் சிறப்பான நாளாக ஆக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் முன்னேற்றம் இருக்கும்.

திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிக சிறப்பாகவே நடக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பிரச்சினைகளும் நல்லபடியாகவே  முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |