மகர ராசி அன்பர்களே …! இன்று கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய முயற்சிகள் நல்லபடியாக நடந்து முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். இன்று காரியத்தில் சின்ன சின்ன தடை, வீண் அலைச்சல், கொஞ்சம் கோபம் போன்றவை இருக்கும் கவனமாக தான் இருக்க வேண்டும்.
துன்பங்கள் விலகி செல்லும். மனநிம்மதி, குடும்பத்தில் குதூகலத்தை உண்டாகும். சுத்தம் சுகாதாரம் என்பதில் கவனமாகவே இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலனைப் பெறுவீர்கள். காதலர்களுக்கும் இன்றைய நாளில் மிகவும் நல்ல நாளாக இருக்கும். திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச்சுவார்த்தை நடத்துங்கள் சிறப்பான பலன்களே கிடைக்கும். அதே போல் உடல் ஆரோக்கியமும் நல்லபடியாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.