கும்ப ராசி அன்பர்களே …! இன்று புதிய முயற்சிகள் ஏதும் தயவு செய்து வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்களுக்கான நேரம் வரும்வரை நாம் காத்திருப்போம். பிறகு எதையும் செய்து கொள்ளலாம். உறவினர்களால் உங்களுக்கு சில விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். ஆனால் அவர்களை தயவு செய்து நீங்கள் குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். உண்மையான நிலையை இன்று நீங்கள் சரியான முறையில் கண்டறிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டர் உங்களுக்கு அறிமுக மாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.
அதேபோல் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். காரியத்தடை வீண் அலைச்சல் உண்டாகலாம். கவனமாக இருங்கள் மனதில் பட்டதை நீங்கள் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். அதனால் மற்றவரிடம் கொஞ்சம் நிதானமாக பேச வேண்டியிருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். சுத்தம் சுகாதாரம் விஷயத்தில் ரொம்ப சிறப்பாக இருப்பீர்கள். அதனால் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். எல்லாவற்றையுமே கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
ஆயுதங்களை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். வாகனத்தில் செல்லும்போது கூட ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம். காதலர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். கூடுமானவரை பேச்சில் நிதானத்தை செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.