Categories
உலக செய்திகள்

7 மாதம் ஆகிடுச்சு…. இப்படி ஆனது கிடையாது…. உலக மக்கள் ஷாக் …!!

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்  நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா அதிக தொற்று கொண்ட மூன்றாவது நாடாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் இதன் தாக்கத்திற்கு 1.59 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 6.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருந்தாலும் மறுபுறம் நம்பிக்கை அளிக்கும் வகையில் குணமடைந்தார் விகிதம் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் 97.23 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.கடந்த 7 மாதங்களாக உலக நாடுகளில் கொரோனா மையம் கொண்டு இருந்தாலும் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக பாதிப்பு பதிவாகியுள்ளது உலக மக்களை நடுங்க வைத்துள்ளது.

நேற்று மட்டும் 2 லட்சத்து 89 ஆயிரத்து 028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பாக நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 78,000 பேரும்,  பிரேசில் நாட்டில் 58000 பேரும், இந்தியாவில் 48 ஆயிரம் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 861 பேர் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் மீண்டு உள்ளது நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

Categories

Tech |