கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கி இருந்துகொண்டு, டுவிட்டர் வாயிலாக ரசிகர்களை உற்சாக படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் 15 வயதிற்குள், 50 வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட அனுமதி இல்லை. மேலும் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கான தடை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.