முதல் முறையாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் பார்வையாளர்களை கனா திரைப்படத்தின் இரு பாடல்கள் பெற்றிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட்டாகி விட்டால் அந்த படத்தினை பலமுறை நினைக்கத் தூண்டும் என்பது தான் உண்மை. அதற்கும் மேலாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி விட்டால் அந்த படமே ஹிட் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் “கனா” என்ற படத்தில் அனிருத் பாடியுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல். இந்தப் பாடல் வெளியான முதல் நாள் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. தமிழ் மொழி அல்லாதவர்கள் கூட டிக்டாக்கில் இந்த பாடலுக்கு வீடியோ பதி விட்டனர். தற்போது ‘ஒத்தையடி பாதையில’ என்ற வீடியோ பாடல் ஆனது யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று மிகப்பெரிய ஹிட் பாடலாக மாறியிருக்கின்றது. இத்தகைய பாடலை அருண்ராஜா காமராஜின் வரிகளில், திபு நினன் தாமஸ் இசையில், இசையமைப்பாளர் அனிருத் பாடி இருக்கின்றார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் பற்றி சிறப்பு காணொளி பதிவு ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.அதே சமயத்தில் ‘ஒத்தையடி பாதையில’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலும் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுருக்கின்றது என்பது பெருமைக்குரியது. தமிழ் ஆல்பம் ஒன்று இவ்வளவு அதிக பார்வையாளர்களை பெற்று இருப்பது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Proud and elated to share u tat #Kanaa is the first ever album in Tamil to hv two songs wit 100 Million+ views 💥🔥👍here is a small video of gratitude 🙏👍🤗#AstonishingTwo100MSongsForKanaa#Massive500MStreamsForKanaa pic.twitter.com/pZ1sSuu50C
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 24, 2020