வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கடந்த 17ஆம் தேதி முதல் இந்திய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் வந்து இறங்கும் விமான நிலையத்திலேயே தொற்றுக்கான முதல் பரிசோதனை நடத்தப்படும் என்றும், தொடர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் சொந்த ஊர்களில் ஏழு நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.