Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக வசித்து வந்த தந்தை… குடித்துவிட்டு அடித்துக்கொன்ற மகன்..!!

பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஜூலை 23 ஆம் தேதி இரவு முனியப்பனிடம் அவருடைய 4ஆவது மகன் வேலன் (45), குடித்துவிட்டு போதையில் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வேலன் தந்தை முனியப்பனை அடித்து கொன்றுள்ளார்.. அதனைத் தொடர்ந்து முனியப்பன் உறவினர்கள் பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் தகவலளித்தனர்..

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |