கால் டாக்ஸி படத்திற்காக செம்ம கிக்கு என்ற பாடலை பிரபல முன்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனகேன்றே தனித்துவமான குரலில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர். இவரது கேள்வி ஞானத்தால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக கண்டறிந்து பாடுபவர். மேலும் இவர் பாடல் மற்றும் சிறந்த வீணை கலைஞர். வைக்கம் விஜயலட்சுமிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது கால் டாக்ஸி என்ற படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி “கிக்கு செம்ம கிக்கு….” என்ற பாடலை பாடியுள்ளார். குத்தாட்டம் போட வைக்கும் இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி தனக்கே உரிய பாணியில் தனித்துவமாக பாடியிருக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தப்பாட்டிற்கு இசையமைப்பாளர் பாணர் பாடல் வரிகள் எழுதி இசையமைத்திருக்கிறார். கே. டி.கம்பைன்ஸ் சார்பில், ஆர்.கபிலா கால் டாக்ஸி படத்தை தயாரித்து வருகிறார். தமிழகத்தில் தொடர்ந்து கால் டாக்ஸி டிரைவர்கள் கொலை செய்யப்படுவதின் காரணமாக உண்மை பின்னணியின் சம்பவத்தை மையமாக வைத்து, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத சஸ்பென்ஸ் அதிரடி திரில்லர் படமாக கால் டாக்ஸி உருவாகி வருகின்றது. பா.பாண்டியன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
எம் ஏ ராஜதுரை ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்தில் பாணர் பாடல் எழுதி இசை அமைத்துள்ளார். எடிட்டிங்கை டேவிட் அஜய்யும், சண்டைக்காட்சிகளை எஸ்.ஆர். ஹரி முருகனும் கவனித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் சரவணன் நடிக்க, அவருக்கு ஜோடியாக மரகத நாடு, ஜீவி, மெர்லின், டக்கு முக்கு டிக்கு தாளம், போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அஸ்வினி நடிக்கிறார். இதனைதொடர்ந்து மதன்பாப், மொட்டை ராஜேந்திரன், ஆர்த்தி கணேஷ் இயக்குனர் ஈ.ராமதாஸ், கான மஞ்சரி சம்பத்குமார், பசங்க குமார், சந்திரமௌலி, முத்துராமன் பெல்லி முரளி, அஞ்சலி தேவி, சேரன் ராஜ், மற்றும் போராளி தீபன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.