Categories
தேசிய செய்திகள்

5 பேருக்கு திருமணமாகவில்லை… முதியவரின் தலையை வெட்டினால் நடக்கும்… இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார்  சுக்லாவை கைது செய்தனர்.

இது குறித்து அந்தபகுதியினர் கூறுகையில், “சுக்லாவும் அவரது 5 சகோதரர்களும் திருமணம் ஆகாதவர்கள்.. கடந்த வாரம் பாதிரியார் ஒருவர் அவர்களை சந்தித்து பேசி வயதான ஒரு நபரை  தூக்கத்தில் தலையை துண்டித்து கொலை செய்தால், உங்களுக்கு திருமணங்கள் விரைவில் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்.. இதனால் பாதிரியார் சொன்னதை நிறைவேற்ற இந்த கொலையை அவர் செய்திருக்க வேண்டும்” என்று கூறினர்..

இது குறித்து எஸ்.எச்.ஓ, (SHO) கர்னல் கஞ்ச் ராஜ்நாத் சிங் கூறும்போது, “குற்றஞ்சாட்டப்பட்ட உதய் பிரகாஷ் சுக்லாகொல்லப்பட்ட பாபுராம் குடும்பத்தினருடன் எந்தவிதமான தகராறும், சண்டையும் போடவில்லை.. இந்த கொலையை செய்ய அவரைத் தூண்டியது என்ன என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்.. கூர்மையான முனையுடைய ஆயுதம் மீட்கப்பட்டு கோர்ட்டில் ஆதாரமாக வழங்கப்படும்”என்றார்.

Categories

Tech |