ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரன்பீர்கர் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் எல்லையில் இருக்கின்ற ஸ்ரீநகர் என்ற நகரின் புறநகரில் உள்ள பன்சினாராவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைப்பெற்று வருகிறது.