இசை என்பது மனிதர்களால் மட்டுமல்லாமல் அனைத்து வித உயிரினங்களாலும் ரசிக்கபடும் என்பதற்கு சான்றாக விளங்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதுபோன்ற ஒரு வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் பசுமையான மரங்கள் நிறைந்த அழகான காட்டுப்பகுதியில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் ஒரு அழகான மான் இவரின் இசையை கேட்டு ரசித்தவாறு மெல்ல மெல்ல இவரை நோக்கி நகர்ந்து வந்தது, பிறகு திடீரென துள்ளிக்குதித்து ஓடியது.
மான் தன்னை நோக்கி வந்ததை கவனிக்காது இசையை வாசித்துக்கொண்டிருந்த அப்பெண் மான் துள்ளி ஓடிய சத்தத்தை கேட்டு திடீரென அச்சம் அடைந்தார். இந்த ருசிகர நிகழ்வு எனது யாழ் வகுப்பு டிஸ்னி படமாக மாறிவிட்டது என்ற தலைப்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பலரும் இசையை ரசித்துக் உணர தெரிந்த மான், இது ஒரு அழகான நிகழ்வு என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
the deer melody#deer #deergifs #deervids pic.twitter.com/yutW1SAPjg
— deer.exe (@deer_exe) July 24, 2020