Categories
அரசியல்

இ-பாஸ் பெறுவதில் சிரமங்கள்… முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்… அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

இ-பாஸ் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து முதல்வர்  பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் அவர்களின் நலன் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினார்.. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

அதிகப்படியான எண்ணிக்கையில் பிசிஆர் சோதனைகள் செய்யப்பட்டு, பரவல் தடுப்பு முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் பெருமளவு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.. கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 1,513 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு தாய்சேய் நலமுடன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றார்..

மேலும் இ-பாஸ் பெறுவதில் ஏற்படுகின்ற குழப்பங்கள், சிரமங்கள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.. சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் உடல் வலி இருப்பவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை  அணுக வேண்டும்” என்று தெரிவித்தார்..

Categories

Tech |