Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 1515 கர்ப்பிணிகள் டிஸ்சார்ஜ் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!

தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 1515 கர்ப்பிணிகள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சிடி ஸ்கேன் வசதி மேம்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி பல மருத்துவமனைகளில் புதிய சி.டி.ஸ்கேன் வசதிகளை  நிறுவி வருகின்றோம்.

தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற மருத்துவமனைகளில் தற்போது வரை 2176 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 1515 பேர் குணமடைந்து வீடு திரும்பிருக்கின்றனர்.இதனைத்தொடர்ந்து பத்து நாட்களில் கொரோனா குறைந்துவிடும் என முதலமைச்சர் கூறியிருந்தார். அந்த காலக்கேடு இன்றுடன் முடிவடைவதால் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸை பொறுத்தவரையில் எத்தகைய நிபுணர்களாலும் கொரோனா பற்றி எத்தகைய கணிப்பையும் கூற முடியாது என பதிலளித்தார்.

Categories

Tech |