அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் சீன தூதரகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அமெரிக்காவின் அறிவுசார்ந்த வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க- சீன உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் சீனாவின் உடைய ஹூஸ்டன் தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவு கொடுத்ததை அடுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூட சீனா வெள்ளிக்கிழமை கட்டளையிட்டது. இருநாடுகளுக்கிடையே தொடர்ந்த இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் கொடுத்த உத்தரவைை தொடர்ந்து சீன தூதரக கதவை தகர்த்து அமெரிக்கா காவல்துறையினர் உள்ளே புகுந்து ஆய்வு நடத்தினர். அமெரிக்க உத்தரவின் பேரில் தூதரகம் மூடப்பட்டதோடு மட்டுமில்லாமல், அதில் பணியாற்றியவர்கள் சுமார் 4 மணியளவில் வெளியேறி உள்ளனர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் அந்த தூதரகத்தின் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அதன்பின் தூதரக நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா உத்தரவிட்ட சிறிது நேரத்தில், தூதரக ஊழியர்கள் எதையோ போட்டு தீக்கொழுத்திய விவரம் வெளியாகி இருக்கிறது. தீயணைப்பு வாகனங்கள் வேகமாக வந்த நிலையிலும், தீயணைப்பு வீரர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையில் அந்த சீன தூதரகம், உளவு பார்க்கும் மையமாக செயலாற்றி வந்ததாகவும், விலைமதிப்பற்ற மருத்துவ ஆராய்ச்சிகளை திருடுவதற்காக சீன அரசால் பயன்படுத்தப்பட்டதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் மூக்கை நுழைப்பதற்கு முயன்றதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அந்த தூதரக அலுவலகம், அமெரிக்காவினரால் நுழைய முடியாத அளவு இரும்புக்கோட்டை போன்று அமைந்ததாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒன்றிணைந்து செயல்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக செயலாற்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா, சீன தூதரகத்தை மூடியதோடு விட்டுவிடாமல், டிக் டாக் போன்ற சீன ஆப்களை தடை செய்யவதற்காகவும், ஹாங்காங்கில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டம் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களுக்கு தடைகள் விதிக்கவும் திட்டமிட்டு வருகின்றது.