Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தடுப்பூசி….! சோதனையில் வெற்றி….!! ஆய்வாளர்கள் மகிழ்ச்சி…!!

சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை எலிகள் மற்றும் குரங்குகள் மீது செலுத்தி வெற்றி கண்டுள்ளது.

கொரோனா தொற்று முதன் முதலில் தோன்றிய சீனாவில் கொரோனாவை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் இருக்கின்ற சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியினை உருவாக்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தடுப்பூசிஆனது ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியிணை போலவே அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், டி செல்களையும் உடலில் அதிக அளவு உற்பத்தி செய்யும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இத்தகைய திறன் வாய்ந்த தடுப்பூசியை எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதனை மேற்கொண்டதில் சீனா வெற்றி கண்டுள்ளது. இதனால் நோயெதிர்ப்பு சக்தியும், டி செல்களும் விலங்குகளில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சோதனையின் மூலம் தடுப்பூசி பாதுகாப்பானதா, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறதா என்பது மதிப்பிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |