கங்கனாவின் ரசிகர்கள் நக்மாவிற்கு எதிராக கிண்டல் செய்து வருவது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பின்னர் வாரிசு அரசியல் என்ற பிரச்சனை உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா மற்றும் பல நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாகப் பேசி குரல் கொடுத்தனர். கங்கனாவை கிண்டலடிக்கும் வகையில் நடிகை நக்மா ட்வீட் செய்திருந்ததை தெரிந்துகொண்ட கங்கனா ரசிகர்கள் நக்மாவை விமர்சித்து வருகின்றனர்.
பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் இல்லை. தொடக்கத்தில் ஆலோசகராக இருந்த அவர், சமீபத்தில் தவறான ஆலோசனைகளை வழங்குபவராக மாறிவிட்டார். ஒருமுறை கங்கனா ஆடிஷனுக்கு செல்லும் போது பஞ்சோலி தாக்கியுள்ளார். சினிமாவுக்கு அவர் மூலமாக நான் வரவில்லை என்று பல விளக்கம் கங்கனா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கங்கனா ரசிகர்கள் நடிகை நக்மா, மற்ற நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு… கிண்டல் செய்து வருவதால் நடிகை நக்மா மற்றும் நடிகை கங்கனா இடையே ஏற்பட்டு இருக்கும் மோதல் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Kangnas nepotism pic.twitter.com/3zsRaUSwQ3
— Nagma (@nagma_morarji) July 22, 2020