தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் 22 மாவட்டங்களில் 100க்கும் மேல் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,51,055ஆக உள்ளது.தமிழக்தில் இதுவரை பதிவாகாத அளவாக இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா பலி 3,409ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முழுவதும் 52,273பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் 13,923பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.07 % குணமடைந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 62பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் இன்று கொரோனா உறுதி கண்டறியப்பட்டுள்ளதில், 22 மாவட்டங்களில் உயிரிழப்பும், 22 மாவட்டங்களில் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றைச் சொல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் சிதைத்துள்ளது. நான்கு மாதங்கள் ஆகியும், இதன் தாக்கம் அதிகரித்து செல்வதால்… எப்போது கொரோனா குறையும் ? எப்போது இதிலிருந்து விடு பெறலாம் ? என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களுக்கு மட்டுமல்லாமல்…. தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தும் சிறப்பான சுகாதார தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிராக போரிட்டு விரைவில் இதனை வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை
100க்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டங்கள்:
சென்னை -1329
செங்கல்பட்டு -449
காஞ்சிபுரம் -442
விருதுநகர் -376
திருவள்ளூர் -385
தூத்துக்குடி – 317
மதுரை – 301
கோவை – 270
குமரி -269
தேனி – 235
ராணிப்பேட்டை – 244
வேலூர் -212
நெல்லை-212
திருச்சி – 199
தஞ்சை-162
விழுப்புரம் -157
தி.மலை – 152
சேலம்-112
புதுக்கோட்டை-110
க.குறிச்சி-104
திருவாரூர்-100
திண்டுக்கல்- 100