Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதி விட்டு… தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… நடந்தது என்ன?

தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததால் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கொல்கத்தாவை சேர்ந்த மன்சி மண்டல் என்பவர் முதுநிலை மருத்துவப் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே 3 மாணவிகளுடன் இவர் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மன்சியுடன் தங்கியிருந்த மற்ற மூன்று மாணவிகளும் தங்கள் வகுப்பிற்கு செல்ல இவர் மட்டும் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அவரது பெற்றோர் மான்சிக்கு போனில் அழைத்துப் பேச முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இந்நிலையில் மதியம் ஒரு மணி அளவில் மன்சியுடன் தங்கியிருக்கும் சக மாணவிகள் அறைக்கு வந்தபோது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இது அவர்களுக்கு சந்தேகத்தை கொடுக்க உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது மன்சி சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த சக மாணவிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் காவல் துறையினர் அறையை சோதனை செய்ததில் மன்சி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் குடும்பத்தார் தன்னை திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் அதனால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே மன்சி தற்கொலை செய்து கொண்டதாக கருதும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |