சிம்ம ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய பணியில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாகவே இருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அரசு வகையில் ஆதாயம் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். அலைச்சல் மட்டும் கண்டிப்பாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசவேண்டும். அனைவரையும்இன்று அனுசரித்து தான் செல்ல வேண்டும்.
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். அதனால் பெரியவர்களிடம் கேட்டு செய்யுங்கள். அவரிடம் கேட்டு பரிபூரணமான ஆலோசனையைப் பெறுங்கள். கணவன் மனைவி இருவரும் எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. முக்கிய முடிவுகளை மனைவியிடமும் ஆலோசித்து எடுங்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உணவு வகைகளை எடுத்துக் கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.
மனதையும் அதே போல அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லை, இருந்தாலும் பேச்சு மட்டும் எப்பொழுதுமே நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.