கொரோனா ஊரடங்கு 4 மாதமாக அமலில் இருக்கும் நிலையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இளைஞர்கள், வேலை வாய்ப்பை தேடி காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த முழு முடக்கம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி வேலைவாய்ப்பை காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு என்று மத்திய அரசாங்கம் சில துறைகளில் வேலை வாய்ப்பை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மத்திய அரசு துறையில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய உடை அலங்கார தொழில்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள 27 இளைய மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி – ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கடைசி தேதி: ஆகஸ்ட் 10-ஆம் தேதி விண்ணபிக்க – இங்கே செல்லவும் : https://nift.ac.in/careers