Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…இடமாற்றம் உண்டாகலாம்…செலவுகள் ஏற்படும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெரும். நண்பரின் உதவி கொடுக்கும் அளவில் இருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு அதிகரிக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். பெண்கள் கலை அம்சம் நிறைந்த பொருட்களை வாங்கும் உச்சத்தில் இருப்பார்கள். குறிக்கோளின்றி வேலை செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படலாம். உங்களுடைய நிதி மேலாண்மையில் கவனமாக இருங்கள்.

மற்றவரிடம் பேசும்போது ரொம்ப கவனமாக பேசுங்கள். உடல் ஆரோக்கியத்தில் எப்பொழுதும் போலவே எச்சரிக்கையாக இருங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது ரொம்ப நல்லது. அதேபோல மனநிம்மதி பெறுவதற்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. புதிய முயற்சிகள் ஏதேனும் இருந்தால் இப்போதைக்கு கண்டிப்பாக வேண்டாம் பொறுமையாக இருக்க வேண்டும். நமக்கான நேரம் வரும் வரை கண்டிப்பாக காத்திருக்க வேண்டும்.

காதலர்கள் எந்த விதத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். சிறப்பான சூழல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |