பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மூன்று முறை கொரோனா சோதனை உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நான்காவது பரிசோதனையில் குணம் அடைந்துள்ளார்.
உலக நாடுகளில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பிரேசில் நாட்டில் தற்போது வரை 20 லட்சத்திற்கு மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான், அதற்கு எத்தகைய ஊரடங்கும் முக கவசமும் தேவையில்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்ற பத்தாம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன் பின்னர் தன்னை தானே அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இரண்டு வாரங்களுக்கு மேலாக தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சென்ற 15 ஆம் தேதி போல்சோனரோ இரண்டாவது கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையிலும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போதும் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதியான நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அதற்கான சிகிச்சைகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நான்காவது முறையாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக கூறியுள்ளார். இது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டேன்” என்று தனது புகைப்படத்துடன் கூடிய பதிவினை பதிவு செய்துள்ளார்.