Categories
தேசிய செய்திகள்

திடீரென்று மாயமான மனைவி… காதலனுடன் மறுமணம்.. கணவனின் விபரீத முடிவு…!!

மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜக்தேவ்(25). இவரது மனைவி ஆர்த்தி சென்ற மாதம் 24 ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து காவல் துறையில் ஜக்தேவ் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளார் ஆர்த்தி. இந்த தகவல் அறிந்த நிலையில் ஆர்த்தியின் கணவர் ஜக்தேவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் மன வேதனையுடன் இருந்த ஜக்தேவ் வீட்டில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை ஜக்தேவ் வீட்டிற்கு அவர் மாமா ராமு சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |