நாட்டின் நலனுக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மங்கி பாத் என்ற வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது என்பது கட்டாயம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல முக கவசம் அணியும் போது நிறைய பேர் அதனை கழற்றி விடுகின்றார்கள் அல்லது மூக்கில் இருந்தும் வாயிலிருந்து எடுத்து விடுகிறார்கள், அவ்வாறு செய்யக்கூடாது. 8 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் இந்த முறைகளை பயன் படுத்தி இருப்பதை நாம் பார்க்கின்றோம். எனவே நாம் முகக் கவசத்தை எடுக்கும் சமயங்களில் இவர்களை நினைத்து கொள்ள வேண்டும், இவற்றை நாம் செய்யக்கூடாது என்று ஒரு வேண்டுகோளையும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வைத்துள்ளார்.
மேலும் அசாம் பீகார் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய வெள்ளம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.