வடகொரியாவில் முதன் முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலக நாடுகள் முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வட கொரியா நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை அந்நாட்டு அதிபர் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து வட கொரியா நாட்டிற்கு தென்கொரியா நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொரோனா அறிகுறி கொண்ட ஒரு நபர் நுழைந்துள்ளார். அதனை அறிந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதன்பின்னர் நாடுமுழுவதும் அவசரநிலையை பிரகனாப்படுத்தியதாகவும், கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் கொரோனா அறிகுறி தென்பட்ட நபர் மிக கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இது நாட்டிற்கு ஆபத்தான சூழ்நிலை என்றும் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் ஒரு நாளைக்கு 40 முதல் 60 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். வடகொரியாவில் சென்ற பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் பொது குளியல் அறைக்கு சென்றபோது, அங்கு சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.