Categories
உலக செய்திகள்

உக்கிரத்தில் கொரோனா… சேர்ந்து மிரட்டும் ஹன்னா சூறாவளி.. அச்சத்தில் மக்கள்…!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உள்ள மக்கள் தற்பொழுது ஹன்னா புயலால் பெரிதும் பீதியில் உறைந்து உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் புயலின் வருகையையும் உறுதி செய்துள்ளனர். சனிக்கிழமை காலை டெக்சாசின் தெற்கே சுழன்று அடித்த புயலால் கோர்பஸ் கிறிஸ்டி பகுதிகளில் பலத்த காற்றும் மழையும் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை தொடங்கிய புயல் டெக்சாஸ் கடற் பகுதியை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கோர்பஸ் கிறிஸ்டி நகர சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு வந்தது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த புயல் அச்சுறுத்தலும் மக்களை பீதி அடைய செய்துள்ளது. கோர்பஸ் கிறிஸ்டி உட்பட நியூசெஸ் கவுண்டியில் சுமார் 362,000 பேர் குடியிருந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்தப் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்பொழுது புயல் சூழப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 382,834 எனவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,837 எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஹன்னா புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். புயல் கரையை கடக்கும் பகுதிகளில் 15 சென்டி மீட்டர் முதல் 45 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கோர்பஸ்  கிறிஸ்டி நகரின்  தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள புயல் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் கரை நோக்கி நகரும் என அந்நாட்டின் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட முதல் சூறாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |